தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேஜிக் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தின் அபாயத்தை விளக்கும் விழிப்புணர்வு முகாம்! - AWARENESS ON ONLINE RUMMY

கோவையில் தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

இணையவழி விளையாட்டு குறித்த விழிப்புணர்வு முகாம்
இணையவழி விளையாட்டு குறித்த விழிப்புணர்வு முகாம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 5:23 PM IST

கோயம்புத்தூர்:கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாம் 'இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்' என்ற தலைப்பில் நடைபெற்றது.

இணையவழி விளையாட்டு விழிப்புணர்வு முகாம்:இதில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சாரங்கன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். மேலும் இம்முகாமில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில் குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்‌, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

மேஜிக் மூலம் விளக்கம்:இந்த முகாமில் மாண்வர்களுக்கு மேஜிக் மூலம் ஆன்லையன் சூதாட்டம் (ரம்மி மற்றும் ஆன்லையன் கிரிக்கெட்) குறித்து விவரிக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து மாணவர்களும் இந்த விளையாட்டுகளின் அபாயம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த மேஜிக் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மேஜிக் நிகழ்ச்சி மூலம் ஆன்லையன் சூதாட்டத்தின் பின் இருக்கும் மோசடிகள் பற்றி எளிமையான முறையில் விளக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆணையத்தின் உறுப்பினர் பேச்சு:இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சாரங்கன் கூறுகையில், “ இந்த விழிப்புணர்வு முகமானது, சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஆன்லைன் சூதாட்டமும் நடவடிக்கையும்:இந்த நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் இணையவழி விளையாட்டுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல், அதை விளம்பரப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்த ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆணையத்தின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில், உளவியல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதையும் படிங்க:மேலும் விரிவடைகிறது கும்மிடிப்பூண்டி மிஷலின் தொழிற்சாலை.. அனுமதி கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பம்!

மாணவர்களிடையே விழிப்புணர்வு:இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சாரங்கன் கூறுகையில், “அரசின் முயற்சியில் மாணவர்களை ஆன்லைன் மோகத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது, உளவியல் விஷயங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து முகாம்கள் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்:அவர்களுடன் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்துகிறோம். சில ஆன்லைன் விளையாட்டுகளை மாணவர்கள் விளையாட விளையாட அதற்கு அடிமையாகிறார்கள். சாதாரணமாக விளையாட துவங்கி இறுதியில் வேலை, படிப்பு உள்ளிட்டவற்றில் நாட்டம் இல்லாமல் சென்று விடுகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம் குறித்த ஆய்வறிக்கை:ஆன்லைன் சூதாட்டம் குறித்த ஆய்வறிக்கைதயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த ஆய்வறிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்த மிக உதவியாக இருக்கும். பல ஆன்லைன் விளையாட்டு வெப்சைடுகள் விதிமுறை இன்றி செயல்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து அந்த வெப்சைடுகள் இங்கு பேட்ச் செய்யப்படுகிறது. இது போன்ற வெப்சைடுகளை கண்டுபிடித்து அதனை தடை செய்து வருகிறோம். குழந்தைகள் விளையாடுகின்ற சில விளையாட்டுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையாளர் பேட்டி:பின்னர் பேட்டி அளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் போக்குவரத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். வாகன நிறுத்த பகுதிகளை அதிகமாக கண்டறிந்து வாகனங்கள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வராமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் பட்டாசு விற்பனை:தீபாவளி சம்பந்தமாக தற்பொழுது வரை எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நடைபெறவில்லை. பட்டாசு கடைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. லைசன்ஸ் இல்லாமல் ஆன்லைன் பட்டாசு விற்பனை செயல்படுவது தடை செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து காவலர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு நாளைக்கு 350 காவலர்களும், அது தவிர ரோந்து பணிகளை மேற்கொள்ளும் காவலர்களும் பணியில் இருக்கிறார்கள். இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. அந்த வழக்குகளை தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். ஒரு சில குற்றவாளிகள் (Dark Browser) இருண்ட உலாவி மூலம் இதனை செய்து உள்ளார்கள் இது குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details