கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இறப்பு எண்ணிக்கை:கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் 31 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 18 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் மூவர் என இதுவரை மொத்தமாக 56 பேர் உயிரிழந்துள்ளனர்.