கடலூர்:கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதியினுள் செல்ல நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
இதற்காக தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் (என்ஓசி) பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மீது வழக்கு உள்ள நிலையில், ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் இருந்து ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் வழங்கி இருந்தனர்.
இதனை, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் குற்றப்பிரிவினர் கண்டறிந்து, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ரா.ராஜாராம் புகார் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், நெய்வேலி டிஎஸ்பி., சபியுல்லாவை வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தினார்.