தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவுன்சிலர் யாரும் பங்கேற்காததால் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.. காஞ்சிபுரத்தில் நடப்பது என்ன? - No confidence motion - NO CONFIDENCE MOTION

No confidence motion gainst Kanchipuram mayor: காஞ்சிபுரம் மாநகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த வாக்கெடுப்பு தயாராக இருந்த நிலையில், கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார்.

காலியாக நிலையில் காணப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி அரங்கம்
காலியாக நிலையில் காணப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி அரங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 9:44 PM IST

Updated : Jul 29, 2024, 10:44 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. அந்தவகையில், மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது.

தோல்வியில் முடிந்த நம்பிக்கையில்லா தீர்மானம் (Credits - ETV Bharat Tamil Nadu)

அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். மேலும், சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர், மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் மேயராக பதவி ஏற்றார்.

அதனை அடுத்து, திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். பின்னர், திமுக தலைமை கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

அதனை அடுத்து மாநகராட்சி ஆணையரிடம் 33 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கூட்டம் நடைபெற்றது. நம்பிக்கையில் தீர்மானத்திற்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் ஆகியவை மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்து வைத்திருந்தனர். சரியாக 10 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் கூட்டம் துவங்குவதாக அறிவித்தார்.

இதனிடையே, சரியாக 10:10 மணியளவில் வந்த 34வது வார்டு கவுன்சிலர் பிரவீன் குமார், நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து கொடுக்கப்பட்ட கடிதத்தில் குளறுபடி இருப்பதாக கூறி மனு ஒன்றை அளித்துவிட்டு சென்றுவிட்டார். வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாததால் பிரவீன் குமாரும் கூட்டத்திற்கு வராததாக கருதப்படும் என ஆணையர் கூறினார்.

அதற்கு தான் மனு கொடுக்க தான் வந்ததாகக் கூறி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சுமார் 11:40 மணி வரை கவுன்சிலர்கள் வருகைக்காக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் காத்திருந்தனர். தொடர்ந்து யாரும் வராததால், கூட்டம் முடிந்ததாகவும், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்துச் செய்தியாளரை சந்தித்த காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், "நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக 33 கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கூட்டம் தொடர்பான கடந்த 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இன்று நம்பிக்கையில்லா கூட்டம் நடைபெற்றது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குச் சீட்டுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. எந்த மாமன்ற உறுப்பினரும் வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறவில்லை என தெரிவித்தார்.

இதுகுறித்து மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், மாநகராட்சி ஆணையர் மீது நம்பிக்கை இல்லை எனவும், அவர் நடத்தும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை என" தெரிவித்தனர். இதனிடையே திமுக எதிர்ப்பு கவுன்சிலர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:செந்தில் பாலாஜிக்கு 50வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! ஆகஸ்ட் 5 இல் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணை

Last Updated : Jul 29, 2024, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details