நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் வசித்துவரும் பொதுமக்கள், மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சிக்கி பாதிப்பு ஏற்படும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, உதகை கோட்டத்திற்கு 0423- 2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262- 261295, உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252 மற்றும் பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.