நீலகிரி:நீலகிரிக்குபெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றான ஊட்டி மலை ரயில், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும், அழகிய இயற்கை காட்சிகள், வனவிலங்குகளும் தென்படுவதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.
இருப்பினும், மழைக் காலங்களில் இந்த மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுவதால், தண்டவாளங்கள் சேதமடைந்து ரயில் ரத்தாவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் காற்றில் சாய்ந்தும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த மலை ரயில் பாதையில் ஆர்டர்லி ஹில் க்ரோ இடையே மண்சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையில் புறப்பட்ட மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கே திரும்ப சென்றது.