நீலகிரி: வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மாவட்டந்தோறும் மக்கள் மழை பாதிப்பால் புகார் தெரிவிக்கும் வகையில் அவசர உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 283 அபாயகர பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:சென்னை சிட்டில இந்த ஏரியால தண்ணீர் அதிகம்.. உஷாரா போங்க!
சுமார் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் துறை சார்பில், கடந்த மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் குழுவாக வயநாடு பகுதிக்கு சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பின் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள உள்ளனர்.
மேலும், அபாயகரமான பகுதிகளை உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, மாவட்டத்தில் உள்ள பாதாள சாக்கடைகள் ஏற்கனவே தூர்வாரப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 மண்டல குழுக்கள் இரவு நேரம் மற்றும் அபாயகரமான பகுதிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்