தூத்துக்குடி: தற்போதைய மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதா கிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 2001. மே 14 முதல் 2006, மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.