தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஒரே நாளில் பொறுப்பேற்ற புதிய சரக டிஐஜி, காவல் ஆணையர்! - KOVAI DIG

கோயம்புத்தூர் சரக டிஐஜி-யாக சசி மோகன் மற்றும் காவல் ஆணையராக சரவண சுந்தர் ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.

புதியாதாக பொறுப்பேற்ற  கோவை காவல் ஆணையர் சரவணா சுந்தர்,  சரக டிஐஜி  சசி மோகன்
புதியாதாக பொறுப்பேற்ற கோவை காவல் ஆணையர் சரவணா சுந்தர், சரக டிஐஜி சசி மோகன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 3:46 PM IST

கோயம்புத்தூர்: சட்டம் ஒழுங்கு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பதவி ஏற்றுள்ள கோவை சரக டிஐஜி சசி மோகன் ஐபிஎஸ் உறுதிபட கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தமிழக முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எஸ்.பிக்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதிதாக பொறுப்பேற்று கொண்ட காவல் துறை அதிகாரிகள் (Credits - ETV Bharat Tamilnadu)

இதில், கோயம்புத்தூர் சரக டிஐஜியாக இருந்த சரவண சுந்தர் பதவி உயர்வு பெற்று, கோவை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ஈரோட்டில் காவல் கண்காணிப்பாளராக இருந்த சசி மோகன் பதவி உயர்வு பெற்று கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள டிஐஜி அலுவலகத்தில் புத்தாண்டு தினத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து டிஐஜி சசி மோகன் கூறும்போது, “கோவை சரகத்தில் சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொதுமக்களுக்கு துரிதமாக நடவடிக்கை எடுப்போம். ஊரக பகுதியில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்று உறுதிபட கூறினார்.

இதையும் படிங்க:போதைப்பொருள் விற்பனை வழக்கு: மேலும் மூவர் கைது! மூலப் பொருட்கள் பறிமுதல்!

அதேபோல், கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சரவணா சுந்தரரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சரவண சுந்தரை, மாநகர துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை மாநகரில் பெண்களுக்கு எதிரான வழக்குகள், விபத்து, தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும். கோவை மாநகரில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முந்தைய காவல் ஆணையர் துவக்கி வைத்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். முக்கிய பிரச்சினையாக உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்று சரவணா சுந்தர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details