தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு; "ஆயிரக்கணக்கான டாக்டர்கள் நம்பிக்கை இழப்பு" - மு.க.ஸ்டாலின் கண்டனம்! - MK Stalin on NEET PG Postponed

NEET-PG EXAM Cancellation: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம், முதலமைச்சர் முக ஸ்டாலின் புகைப்படம்
கோப்புப்படம், முதலமைச்சர் முக ஸ்டாலின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu, DMK X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 9:50 PM IST

சென்னை: யூஜிசி - நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை தமிழக அரசு செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது.

அதில், "யூஜிசி - நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.

இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன.

இந்த முறைகேடுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில்,

  • தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி,
  • பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதனை ஆக்கி,
  • தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து,
  • அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து,

சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோப்போம்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"என் மகன் எந்த தப்பும் பண்ணல"... கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைதாகியுள்ள கண்ணுக்குட்டியின் தாய் குமுறல்! - Mother of Accused in Kallakurichi

ABOUT THE AUTHOR

...view details