தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை எஸ்பிஐ வங்கியில் மர்ம நபர் கொள்ளை முயற்சி; போலீஸ் விசாரணை..! - CHENNAI SBI BANK ROBBERY

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளை முயற்சி நடந்த வங்கி
கொள்ளை முயற்சி நடந்த வங்கி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 5:15 PM IST

சென்னை: திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு வங்கியில் பின்புறம் வாயில் பூட்டை உடைத்த மர்ம நபர் உள்ளே இருந்த மர கதவின் கண்ணாடியை மட்டும் கீழே வைத்துள்ளார்.

பின்னர் வங்கி மேலாளர் அறைக்கு சென்று பணம் இருக்கும் ஸ்ட்ராங் ரூமிற்கான சாவியை எங்கே தேடியும் கிடைக்காததால், கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு ஆயுதத்தை வைத்து ஸ்டராங் ரூமை பலமாக உடைத்து திறக்க முயற்சித்துள்ளார். அது முடியாததால், வங்கி கொள்ளை தோல்வி அடைந்து தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வங்கியை திறக்க வந்த பணியாளர்கள் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'போராட்டம் நடத்துவோம்'.. அரசு மருத்துவமனை காலி பணியிடங்களை நிரப்புங்க - சிபிஐ முத்தரசன்..!

சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வங்கியில் இருந்து பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என தெரிய வந்தது.

இந்நிலையில், வங்கியின் நுழைவாயிலில் ''வங்கி இன்று செயல்படாது அருகில் உள்ள திருவல்லிக்கேணி கிளை வங்கியை அணுக வேண்டும்'' என நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

இதே போன்று கடந்த புதன்கிழமை இரவு வங்கியின் அருகில் இருக்கக்கூடிய ரேடியோ வேர் ஹவுஸ் நிறுவனத்தில் கொள்ளை முயற்சி நடைப்பெற்றுள்ளது. கட்டிடத்தின் பின்புறமாக உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்த மர்ம நபர் பின்னால் இருந்த செட்டரின் பூட்டை உடைத்து முதல் தளத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய அறையில் பூட்டுகளையும் உடைத்து உள்ளே முழுவதையும் பணம் ஏதும் உள்ளதா என்பது குறித்து நோட்டமிட்டுள்ளார். 210 ரூபாய் பணம் மட்டும் எடுத்துக்கொண்டு வேறு எந்த பொருட்களையும் எடுக்காமல் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து நேற்று காலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் இந்த இரண்டு கொள்ளை முயற்சி சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபரா என்ற கோணத்திலும் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details