தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சென்னை-மயிலாடுதுறை இன்டர்சிட்டி ரயில் சேவை" எம்.பி.சுதா கோரிக்கை! - MP SUDHA

மயிலாடுதுறையில் இரட்டை ரயில் வழித்தடம் ஏற்படுத்துவதற்கு வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேச உள்ளேன் என எம்.பி. சுதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை எம்.பி.சுதா
மயிலாடுதுறை எம்.பி.சுதா (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 9:22 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் விரிவாக்கப்பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இப்பணிகளை மயிலாடுதுறை எம்.பி. சுதா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, நடைமேடையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் உடைந்து தரமற்ற முறையில் இருந்ததைக் கண்டு அவர் ஒப்பந்ததாரரிடம் கடிந்து கொண்டார். இந்த பணிகளை சரியாக செய்யுங்கள், இதற்காக மீண்டும் நிதி ஒதுக்க முடியுமா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.தொடர்ந்து சமையல் கூடம், தங்கும் அறை கட்டுமான பணிகளைப் பார்வையிட்ட பின்னர், பேட்டரி கார் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? என்று ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பிய போது, ஓட்டுநரிடம் இருந்து சிகரெட் வாடை வந்ததால், பேட்டரி கார் ஓட்டும்போது சிகரெட் பிடிக்காதீர்கள் என்று அறிவுறுத்தினார்.

மயிலாடுதுறை எம்.பி.சுதா பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சுதா கூறுகையில்,"மயிலாடுதுறை வழியாக 88 ரயில்களுக்கு மேல் சென்னை செல்லும் நிலையில் ஒரு சில ரயில்கள் மட்டுமே மயிலாடுதுறையில் நின்று செல்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக அவதியடைகின்றனர். சென்னையிலிருந்து மயிலாடுதுறை வரும் பயணிகள், மீண்டும் உடனடியாக சென்னைக்கு திரும்பிச் செல்லும் வகையில் இன்டர்சிட்டி ரயில் சேவை ஏற்படுத்தித் தர ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

இன்டர்சிட்டி ரயிலை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை பகுதியில் இரட்டைவழி பாதை இல்லாதது மிகப்பெரிய குறைபாடாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவில்லை.

இதையும் படிங்க:காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

ரயில்களில் பயணிக்கும் "நான்" ஏசி மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பலமுறை புகார் தெரிவித்துள்ளேன். இரட்டை ரயில் வழித்தடம் ஏற்படுத்துவதற்கு வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேச உள்ளேன். மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவையை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நான் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் பேசியபோது என்னுடைய கவனத்திற்கு வரவில்லை என்றும் தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் துவங்குவது குறித்து ஒரு குழு அமைத்து அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

ஆன்மீக சுற்றுலா தலமாக உள்ள மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் தங்கும் விடுதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். இடம் உள்ளது, ஆனால் விடுதி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்" என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி தலைவர் செல்வராஜ், ரயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details