தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது சாத்தியம்" - எம்பி மாணிக்கம் தாகூர் சொல்வதென்ன? - manickam tagore - MANICKAM TAGORE

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாமல் இருக்கும் என்று அக்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

எம்பி மாணிக்கம் தாகூர்
எம்பி மாணிக்கம் தாகூர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 5:50 PM IST

விருதுநகர்:காமராசர் நினைவு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தை ஒட்டி விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள திருஉருவச் சிலை மற்றும் ரயில்வே ஜங்ஷனில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,"கர்நாடகா முதல்வர் சீதாராமையா மீது போடப்பட்டுள்ள வழக்கு பாஜக செய்த சதி. இந்த வழக்கு என்பது பிற்படுத்தப்பட்ட தலைவரான சீதாராமையாவை அவமானப்படுத்துவதற்கும், அமலாக்கத் துறையை வைத்து பாஜக செய்த வேளையாகும்.

இந்த வழக்கை சட்டரீதியாக காங்கிரஸ் கட்சியும் சீதாராமையாவும் எதிர்கொள்வோம் என்றார். மேலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்றது. குறிப்பிட்ட வகையிலே ஒரு மாநிலத்தை சேர்ந்த இந்திய அளவில் தொழில் செய்கின்றவர்கள் மாநில அரசு சட்ட விரோத பண பரிவர்த்தனைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன.

எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

சட்ட விரோத பண பரிவர்த்தனை விவகாரத்தில் மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் தொடர்ந்து இதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாகத் தான் தெரிகிறது. சட்ட பரிவர்த்தனை கண்காணிக்கக் கூடிய அதிகாரிகளும் எதிர்க்கட்சிகள் மீது பாய்வதிலேயே குறியாக இருக்கின்றன.

இதையும் படிங்க:இன்னும் 150 நாட்கள் தான்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சூசகம்!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும். இப்போது இருக்கின்ற காலம் என்பது திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையாக இருந்து வருவது மது ஒழிப்பு கொள்கை முக்கியமான ஒன்றாகும்.

அரசியல் பலம் என்பது வேறு கொள்கை ஈடுபாடு என்பது வேறு, அரசியல் மத்திய பாஜக அரசு தமிழகத்தின் மீது பாரா முகமாக இருந்து வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பது மோடியின் முகமாக இருக்கிறது. வெளி வேஷம் போடுவதில் மோடி அரசு அதிகமாக காட்டுகிறது. உண்மையிலேயே தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் தொடர்ந்து காட்டி வருகிறது.

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான போதிய உறுப்பினர்கள் பாஜகவிடம் இல்லை. எனவே தீர்மானம் நிலை குழுவுக்கு செல்லுமே தவிர மசோதா நிறைவேறாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பாஜகவின் ஊது குரலாக இருந்து வருகிறார். பாஜக என்ன மத அரசியலை செய்ய விரும்புகிறதோ அதை பவன் கல்யாண் செய்ய விரும்புகிறார். இதை ஆந்திர மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் 6 முக்கியமான திட்டங்களை கூறி ஆட்சிக்கு வந்தார்கள்,ஆனால் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details