தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் தொடர் கனமழை; தொங்கியபடி நிற்கும் பாறை! - வாகன ஓட்டிகள் அச்சம்! - NILGIRIS RAIN

நீலகிரியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக உயரமான மலைப்பகுதிகளில் இருந்து உருண்டு வந்த பாறை ஒன்று சாலையோரத்தில் தொங்கியபடி நிற்பதால் அதனை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்சரிவில் தொங்கியபடி நிற்கும் பாறை
மண்சரிவில் தொங்கியபடி நிற்கும் பாறை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 6:29 PM IST

நீலகிரி : நீலகிரி மாவட்டம், குன்னூர், உதகமண்டலம் ஆகிய பகுதியில் கடந்த ஒரு வாரங்களுக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கனமழை காரணமாக நிலத்தின் ஈரத்தன்மையும் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து கனமழையின் காரணமாக மலைப்பாதையில் உள்ள சாலையோரங்களில் அவ்வப்போது லேசான மண்சரிவு ஏற்பட்டுவது வழக்கம். அந்த மண் சரிவினால் சிறிய அளவிலான கற்களும், பாறைகளும் உருண்டு வந்து சாலைகளில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க :நாளை தமிழக பள்ளிக் கல்வி துறையின் ஆய்வு கூட்டம்; நிறைவேறுமா ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு..?

அந்தவகையில், தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் உயரமான பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறை ஒன்று மண்சரிவில் சிக்கி தொங்கியவாறு உள்ளது.

தற்போது தொடர் மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் தொங்கிய பாறை உருண்டு விழும் சூழல் ஏற்படலாம் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர். இதனால் தொங்கியபடி நிற்கும் பாறையை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details