தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

ETV Bharat / state

ஆசிரியர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 48,510 மாணவர்களுக்கு பட்டம்! - Convocation of TN TeEU

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில் 48,510 பேர் பட்டம் பெற்றனர்.

மாணவருக்கு பட்டம் வழங்கும் ஆளுநர் ரவி
மாணவருக்கு பட்டம் வழங்கும் ஆளுநர் ரவி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை :சென்னை சைதாப்பேட்டை திறந்தநிலை பல்கலைக்கழக அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில், புதிதாக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன், புதுடெல்லி தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் தலைவர் பங்கஜ் அரோரா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் நேரில் 66 பேர் முனைவர் பட்டமும், 41 ஆய்வு நிறைஞர்கள் பட்டமும், 4 முதுநிலை கல்வியியல் மற்றும் 21 இளநிலை கல்வியியல் மாணவர்கள் என 48,510 மாணவர்கள் பட்டம் பெற்றனர். நேரில் வராதவர்கள் 40,786. இளநிலை கல்வியியல் 7,716 பேர். முதுநிலை மற்றும் 416 பிஎஸ்சி, பி.எட் பட்டம் பெற்றனர்.

இதையும் படிங்க :"விசாரணை என்ற பெயரில் ஆசிரியர்களை மிரட்டுவதா?" - பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் கடந்த ஓராண்டிற்கு மேலாக காலியாக உள்ளது. இந்நிலையில் சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக உள்ள உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் கையொப்பமிட்டு பட்டமளிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details