தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கத் தெரியாதவர்கள் குறி.. தூத்துக்குடியில் அரங்கேறிய நூதன சம்பவம்! - Debit Card Cheating Thoothukudi

ATM Card money theft: ஸ்ரீவைகுண்டம் அருகே ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் இருந்து நூதன முறையில் ரூ.29 ஆயிரம் வரை திருடியுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ATM
ஏடிஎம் மையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 4:11 PM IST

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லக்குளம் அரியநாயகபுரத்தைச் சேர்ந்தவர் களுங்கன். இவரது மனைவி லதா (46). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியோடு இணைந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது லதாவுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால், அருகில் இருந்த நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தரச் சொல்லி உள்ளார்.

இதனையடுத்து, பணத்தையும் எடுத்துக் கொடுத்து ஏடிஎம் கார்டையும் லதாவிடம் அந்த மர்ம நபர் கொடுத்திருக்கிறார். அதனை வாங்கிச் சென்ற லதாவிற்கு, சில நாட்களில் அவரது செல்போனுக்கு அவரது வங்கிக் கணக்கில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.

இதனையடுத்து, இது குறித்து வங்கி பணியாளர்களிடம் லதா கேட்டபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமல்லாமல், அவ்வப்போது ரூபாய் 29 ஆயிரம் வரை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, தனது பணம் திருடப்பட்டது குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து, காவல் துணை ஆய்வாளர் அந்தோணிராஜ் தலைமையிலான போலீசார், வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு நூதன முறையில் பெண்ணிடம் ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஓசூரில் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.14.5 லட்சம் கைவரிசை.. அரங்கேறும் தொடர் கொள்ளையால் திணறும் போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details