தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வக்ஃப் சட்டத்தில் மோடி அரசு கொண்டு வரவுள்ள 40 திருத்தங்கள்? இந்தியா கூட்டணியை அலர்ட் செய்யும் மனிதநேய மக்கள் கட்சி! - Jawahirullah on Waqf Amendment Bill - JAWAHIRULLAH ON WAQF AMENDMENT BILL

Waqf Amendment Bill: வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவது மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து முஸ்லிம் எதிர்ப்பை மூலதனமாக்கும் முயற்சி என சாடிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதாவை எதிர்க்க வேண்டுமென இந்தியா கூட்டணி எம்.பிக்களுக்கு வலியுறுத்தி உள்ளார்.

ஜவாஹிருல்லா பேட்டி
ஜவாஹிருல்லா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 3:15 PM IST

சென்னை: வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவருவதற்கு இந்தியா கூட்டணி உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் எதிர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக அரசு வக்ஃப் சட்டம் 1995ல் திருத்தங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன. முஸ்லிம் தனவந்தர்கள் சமூக நலனுக்காக அர்ப்பணித்துள்ள சொத்துகளே வக்ப் சொத்துகள் என அழைக்கப்படுகின்றன.

40 வகையான திருத்தங்கள்:வக்ஃப் சொத்துகளைக் கண்காணித்து மேலாண்மை செய்வதற்காக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் 1954ல் வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. அதன்பின் மத்திய வக்ஃப் வாரியமும், மாநில வக்ஃப் வாரியங்களும் உருவாக்கப்பட்டன. வக்ஃப் வாரியச் சட்டத்தில் 40 வகையான திருத்தங்களை மோடி அரசு மேற்கொள்ளவிருப்பதாகச் செய்திகள் இப்போது ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் எந்த வகையானவை என்பது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை.

வக்ஃப் வாரியத்தில் பெண்களும் செயல்படுகின்றனர்:இருப்பினும் வக்ஃப் வாரியங்களின் செயல்பாடுகளை முடக்கி, வக்ஃப் சொத்துகளைத் தன்வயப்படுத்தும் தீய நோக்கத்துடன் இச்சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. வக்ஃப் வாரியம் எந்த ஒரு சொத்தையும் தனது சொத்து என்று அறிவிக்கலாம் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. ஒரு மாநிலத்தில் உள்ள வக்ஃப் சொத்துகளை நில ஆய்வு செய்து அடையாளம் காணும் பொறுப்பு மாநில அரசின் வருவாய்த் துறைக்கே இருக்கின்றது.

வக்ஃப் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராக செயல்படுபவர் மாநில அரசால் நியமிக்கப்படும் அரசு அலுவலர் தான். வக்ஃப் வாரியத்தில் பெண்கள் உறுப்பினர்களாகவும், வாரியத்தின் தலைவர்களாகவும் செயல்பட்டு வருகிறார்கள். எனவே பெண்களை உறுப்பினர்களாக நியமிப்பதற்காக இந்த திருத்தம் எனச் சொல்லப்படுவதிலும் நியாயமில்லை. மோடி அரசு ஏற்கனவே மிகவும் சிறுபான்மையினரான ஆங்கிலோ இந்தியர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறித்தது.

மத்திய வர்க்கத்தினருக்கு பெரும் ஏமாற்றம்:தற்போது ரயில்வே இராணுவத்திற்கு அடுத்த அதிகமாக நிலப்பரப்புள்ள சொத்துகளைப் பறிக்கும் நோக்கத்தில் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வர முயல்கின்றது. ஏற்கெனவே பல மாநிலங்களில் கணிசமான வக்ஃப் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றில் பல அரசு அலுவலகங்களாக, இன்னபிற அரசு பயன்பாட்டிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய வர்க்கத்தினருக்கு பெரும் ஏமாற்றமே இருந்தது.

சட்ட திருத்தத்தை எதிர்க்க வேண்டும்: இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில்களின் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள சூழலில். முஸ்லிம் வெறுப்பை மூலதனமாக்க வக்ஃப் சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்திருத்தங்களை முன்மொழியும் மசோதா தாக்கல் செய்யப்படும்போது, இந்தியா கூட்டணிக் கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிர்த்து இத்திருத்தங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமாரும் இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்ற ஜவாஹிருல்லா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Join ETV Bharat Tamil Nadu WhatsApp channel click here (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:பாஜக வழக்கறிஞர் மீதான குண்டர் வழக்கு.. காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு! - Madras High Court

ABOUT THE AUTHOR

...view details