சென்னை:சென்னை தலைமை செயலகத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அதிமுகவினர்கேட்டிருந்தனர்.
கிட்டத்தட்ட 60 உயிர்களை பலி கொடுத்த இந்த விவகாரம் தொடர்பாக பேச கேட்டதற்கு அவை தலைவர் மறுத்துவிட்டார். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்த காரணத்தால் அவை தலைவர் காவலர்களை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டார்.
மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதை ஒடுக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? அதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர், அவை தலைவர் ஒருதலைபட்சமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டத்தொடரில் ஏற்கெனவே நான் பேசும்போது சொல்லி இருக்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.