தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவர் குருபூஜை; மதுரை, பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் மரியாதை! - MK STALIN PAY RESPECT AT THEVAR

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரையில் உள்ள தேவர் திருவுருவச்சிலை மற்றும் பசும்பொன்னில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

THEVAR JAYANTHI 2024  Madurai Thevar statue  MK Stalin  தேவர் ஜெயந்தி
தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தும் காட்சி (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 9:01 AM IST

Updated : Oct 30, 2024, 2:34 PM IST

மதுரை:தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்குச் செல்லும் வழியில் மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருவுருச்சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று (அக்.30) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்ய உள்ளார்.

பசும்பொன் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை (Credits - ETV Bharat Tamil Nadu)

அதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு மதுரை விருந்தினர் இல்லத்தில் தங்கிய அவர், இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, பசும்பொன் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் மதுரை தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள மருதிருவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனங்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு: நீதிமன்ற உத்தரவு என்ன?

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், தமிழ்நாடு அரசின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பெரியகருப்பன், கேகேஎஸ்எஸ் ஆர்ஆர், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், தமிழரசி, முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 30, 2024, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details