ஹைதராபாத்:தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இன்று (டிச.4) காலை 7.27 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த அதிர்வு ஹைதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டத்திலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, முலுகு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறுகின்றனர். அதிகாலையிலேயே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.