சென்னை :தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் திமுக சார்பில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
"விஜய் ஆரம்பித்த கட்சி 6 மாசம் தான் ஓடும்"- திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் சினிமா பாணியில் விமர்சனம்! - minister anbarasan criticized tvk - MINISTER ANBARASAN CRITICIZED TVK
நடிகர் விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அவர் ஆரம்பிச்ச அரசியல் கட்சி 6 மாதம் தான் ஓடும். அதற்கு மேல் ஓடாது என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்துள்ளார்.
Published : Sep 11, 2024, 5:10 PM IST
அப்போது பேசிய அவர், "இன்று நடிகர் எல்லாம் அரசியல் பக்கம் வந்து விட்டனர். ஏற்கனவே வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்ன என்று நாம் பார்த்துவிட்டோம். அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். நடிகர் விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அவர் ஆரம்பிச்ச அரசியல் கட்சி 6 மாதம் தான் ஓடும். அதற்கு மேல் ஓடாது. யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுக தான்" என பேசினார்.
இதையும் படிங்க :“உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும்" - தீர்மானம் நிறைவேற்றிய திமுக மூத்த அமைச்சர்! - Minister Udhayanidhi Stalin