தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது" - அமைச்சர் சேகர் பாபு கிண்டல்!

போரூரில் அமைக்கப்பட்டு வரும் ஈரநிலை பசுமை பூங்காவை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தபோது, குளத்தில் மலர்ந்திருந்த தாமரையை பார்த்து குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என்று கிண்டலாக கூறினார்.

குளத்தில் மலர்ந்துள்ள தாமரை, அமைச்சர் சேகர் பாபு
குளத்தில் மலர்ந்துள்ள தாமரை, அமைச்சர் சேகர் பாபு (Credits - ETV Bharat Tamil Nadu, minister sekar babu X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 5:21 PM IST

சென்னை:சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், சிறுவர் விளையாட்டுத்திடல், 6.85 ஏக்கர் அளவில் குளம், திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பூங்காவின் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க :"முதலமைச்சர் கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026-ல் தெரியும்" - வானதி சீனிவாசன்!

இதில் கூடுதலாக மின்விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து சில பரிந்துரைகளையும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அத்துடன் அங்கு குளத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்து, குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என கிண்டலாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details