தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எய்ம்ஸ் விவகாரத்தில் முதல் குற்றவாளி எடப்பாடி பழனிசாமி தான்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு - narendra modi

Minister Ma.Subramanian: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டியிருந்தால் முதல் குற்றவாளி எடப்பாடி கே.பழனிசாமி தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Minister Ma.Subramanian
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 9:50 AM IST

புதுச்சேரி: சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் நேற்று (பிப்.18) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வெங்கடசுப்பா ரெட்டியார் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குப் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவரைத்தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் சிங்கார வேலரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினர், மீனவ அமைப்புகள் சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி திமுக சார்பில் சிங்கார வேலர் சிலைக்குத் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'புதுச்சேரியைப் பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வண்ண நிறத்தில் உள்ள பஞ்சுமிட்டாய்க்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடை இல்லை.

மதுரை எய்ம்ஸ் கல்லூரி விவகாரத்தில், தூங்கும் நபர்களை எழுப்பி விடலாம். தூங்குவது போல் நடிக்கும் நபர்களை எழுப்ப முடியாது. மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டுமானத்தில் ஏன் காலதாமதம் என்றால் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமரை அழைத்து வந்தது, எடப்பாடி கே.பழனிசாமி. நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் யாருக்கோ சொந்தமான ஒரு இடத்தில் மருத்துவக்கல்லூரி கட்ட எப்படி அடிக்கல் நாட்டப்பட்டது' என அவர் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், 'வேறு யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட ஒரு மாநில முதலமைச்சர் எப்படி பிரதமரை அழைத்து வந்தார். நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் வேறு யாருக்கோ சொந்தமான ஒரு இடத்தில் அடிக்கல் நாட்டியிருந்தால், அதில் முதல் குற்றவாளி எடப்பாடி பழனிசாமிதான்.

அது தெரியாமல், பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தால் அவரும் குற்றவாளி தான். கடந்த 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் இருப்பதால்தான் எய்ம்ஸ் கல்லூரி கட்டுவதற்கு காலதாமதம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது பொறுப்பற்றது.

இந்தியாவில் உள்ள மற்ற எய்ம்ஸ் கல்லூரிக்கு எல்லாம் நிதி ஆதாரம் கொடுக்கும் மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள கல்லூரிக்கு மட்டும் நிதி தர மறுக்கிறது என்ன காரணம்? என்று தெரியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:இயந்திரக் கோளாறு காரணமாக அபுதாபி செல்லும் விமானம் ரத்து..பயணிகள் கடும் அவதி!

ABOUT THE AUTHOR

...view details