விருதுநகர்: விருதுநகர் மக்களவைத் தொகுதியில், இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் தேர்தல் கட்சி அலுவலகத்தை, இன்று (மார்ச் 31) வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, தேர்தல் கட்சி அலுவலகத்தில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்ட, தேர்தல் பிரச்சார வியூகங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது, "தேர்தல் கட்சி அலுவலகம் திறப்பு விழாவுக்கு எப்படி ஆர்வத்துடன் வந்திருக்கிறீர்களோ, அதேபோல, தேர்தல் பணியையும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைத்துச் செயல்பட்டால் சிதறிக் கிடக்கும் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைக்கும்.