தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000" - அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! - MADRAS HIGH COURT

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச தொகுப்புடன் ரூ.2,000 சேர்த்து வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை, அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம், பணம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம், பணம் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

சென்னை:பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச தொகுப்புடன் ரூ.2,000 சேர்த்து வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கடந்த 2009 - 2024 ஆம் ஆண்டு வரை தமிழர்கள் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச தொகுப்புடன் சேர்த்து பணமும் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இலவச தொகுப்பு வழங்கும் திட்டத்தை 2009-ல் தொடங்கி 2011 வரை வழங்கினார். பின்னர், ஆட்சி மாற்றத்திற்கு பின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2013-ல் 100 ரூபாய் பணமும் சேர்த்து வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி 2019ல் இலவச தொகுப்புடன் 1,000 ரூபாயும், கரோனா காலத்தில் 2,500 ரூபாயும் வழங்கினார். பின்னர், 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2 கோடியே 19 லட்சம் பயனாளர்களுக்கு 2,429 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு நிதிப் பற்றாக்குறை காரணமாக, நிதி உதவி வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்குவது பேருதவியாக இருக்கும். அதனால், இந்த பொங்கல் பண்டிகைக்கு இலவச தொகுப்புடன் சேர்ந்து 2,000 ரூபாய் நிதி உதவி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க:அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான கொலை மிரட்டல் வழக்கு: 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு!

இந்நிலையில், நீதிமன்றத்தில் பாஜக சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மணி, பொங்கல் பண்டிகைக்கான இலவச தொகுப்புகள் நேற்று (ஜன 09) முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் அவசர வழக்காக வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை அவசர வழக்காக விசாரிக்க எந்த விதமான முகாந்திரமும் இல்லை. தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றத்தில் முறையிட்டால், அபராதம் விதிக்கப்படும் எனத் எச்சரித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details