சென்னை:சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பலம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்பு வாசிகள், தங்கள் வீடுகளின் முன் அனுமதியின்றி "நோ பார்க்கிங்" போர்டுகளை வைத்துள்ளதாக கூறி, நந்தகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் அனுமதியின்றி "நோ பார்க்கிங்" போர்டுகளை வைப்பதுடன், பூந்தொட்டிகளையும் வைத்துள்ளதாகவும், இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட போது, இதுபோல போர்டுகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என போக்குவரத்து காவல் துறையும், சென்னை மாநகராட்சியும் பதிலளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த போர்டுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit -ETVBharat TamilNadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பேராசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கு: சென்னை பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு! - Professor Recruitment Malpractice