சென்னை:இராமநாதபுரத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பூபாலன், தன்னை வழக்கறிஞராக பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் மீது காவல்துறையில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது என பார் கவுன்சில் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து பூபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், “குற்றத்திற்கு தன் மீது போதிய ஆதாரங்கள் இல்லாதபோதும், வழக்கு நிலுவையில் இருப்பதற்காக தன்னை வழக்கறிஞராக பதிவு செய்ய பார் கவுன்சில் மறுத்துவிட்டது. மேலும், வழக்கறிஞராக பதிவு செய்யவரும் அனைவரிடமும், நன்கொடையாக குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் பணம் வசூலிக்கப்படுகிறது” இவ்வாரு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, “தாங்கள் வழக்கறிஞர்களாக தொழில் தொடங்கிய காலத்தில் குறைவாக இருந்த நன்கொடை வசூலிக்கும் பழக்கம் அதிகரித்து தற்போது வரை புழக்கத்தில் இருக்கிறது. உரிய காரணமின்றி வசூலிக்கப்படும் பணம் லஞ்சமாகவே கருத முடியும்.