தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு; ஈபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் கெடு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RS BHARATHI  Edappadi K Palaniswami  Madras High Court  DMK
சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை:போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்த நிலையில், திமுகவுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்தி, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதால், ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், "திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் அணியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களைப் பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அவரது பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும்" மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி டிக்காராமன் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி டிக்காராமன், மனு குறித்து ஒரு வாரத்தில் பதில்மனுத் தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; நவ.29-க்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details