தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது” - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Madras High Court - MADRAS HIGH COURT

Madras High Court: வெறித்தனமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வது தொடர்பாக எந்த முடிவும் மத்திய அரசு எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புபடம், சென்னை உயர்நீதிமன்றம்
கோப்புபடம், சென்னை உயர்நீதிமன்றம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 9:21 PM IST

சென்னை: கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நிய வர்த்தகத்துறை தலைமை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பாணையில், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள் பாதிக்கப்படும் என எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும், புள்ளி விவரங்களும் இல்லாமல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி பரிசோதித்த பிறகுதான் அனுமதி வழங்கப்படுவதால், உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை.

இந்திய நாய்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து தான் அந்த இலக்கை எட்ட முடியும் என்பதும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். அதேசமயம் வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வதை முறைப்படுத்தலாம் எனக் கூறி, மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாய்கள் இனப்பெருக்கம் சம்பந்தமாக விலங்குகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான விதிகளை அரசு 8 வாரத்தில் வகுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு அபாயகரமான, வெறித்தனமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஜூன் 14ஆம் தேதி வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் இழப்பு யாருக்கு? - AIADMK BJP Alliance

ABOUT THE AUTHOR

...view details