சென்னை:கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், “ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.