சென்னை:சென்னையில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு, தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் இன்று (நவ.16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளையும், போதையில்லா தமிழ்நாடு என்ற இணையதளம் சார்ந்த செயலி தொடங்கப்படுவது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அண்டை மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக, போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது. மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் போதைப் பொருட்கள் சாதாரணமாகக் கிடைக்கிறது. இதனைக் கட்டுபடுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என சட்ட பணிகள் ஆணையக் குழுவிற்கு உத்தரவிட்டனர்.