தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - blind disabled people protest

Madras High Court order: பார்வை மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 2:39 PM IST

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட 1 சதவீத ஒதுக்கீட்டை அரசாணைப் படி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கடந்த 12 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், பார்வை மாற்றுத்திறனாளிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி, உத்தரவிடக் கோரி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று (பிப்.16) தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை தான். அதை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும். திடீரென்று சாலையில் அமர்ந்து யாரும் போராட்டம் நடத்த முடியாது. காவல்துறையின் அனுமதி பெற வேண்டும்.

ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில், அவற்றை நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சட்டப்படி நடத்தப்படக்கூடிய ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டத்தில், காவல்துறையினர் அத்துமீறினால், அதில் நீதிமன்றம் தலையிடும். எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடலாம்” என்று வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை! டிடிவி தினகரன் கடும் கண்டனம்..

ABOUT THE AUTHOR

...view details