நீலகிரி: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. கோடை விடுமுறையை ஒட்டி, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குன்னூர், ஊட்டி போன்ற பகுதிகளை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் நூற்றாண்டு பழமை மிக்க யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மே 18ஆம் தேதி முதல் கனமழை பெய்து வந்த நிலையில், அடர்லி, கல்லாறு ஆகிய இடங்களில் மலை ரயில் பாதைகளில் தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் மலை ரயில் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.