தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! - TN WEATHER REPORT - TN WEATHER REPORT

TN Weather Report: அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 3:02 PM IST

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):சோலையார் (கோயம்புத்தூர்) 2, சிங்கம்புணரி (சிவகங்கை) 1.

அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், தருமபுரி மற்றும் கரூர் பரமத்தியில் 41.2 டிகிரி செல்சியஸ், திருத்தணி & திருப்பத்தூரில் 40.8 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 40.7 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் (நகரம்) 40.2 டிகிரி செல்சியஸ், கோயம்புத்தூர் (விமான நிலையம்) மற்றும் நாமக்கல்லில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி – 39 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23 டிகிரி – 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

23.04.2024 முதல் 25.04.2024 வரை:தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

26.04.2024 முதல் 29.04.2024 வரை:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

23.04.2024 முதல் 27.04.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி – 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: 23.04.2024 முதல் 27.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 23.04.2024 & 24.04.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

இதையும் படிங்க:தேனியில் ஒரே சமயத்தில் எதிர்சேவை அளித்த இரு கள்ளழகர்.. விண்ணதிர கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்! - Theni Lord Kallazhagar Festival

ABOUT THE AUTHOR

...view details