தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. மனநல ஆலோசகர் போக்சோவில் கைது! - POCSO Act - POCSO ACT

நாகை அரசு காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்சோவில் கைது செய்யப்பட்ட மனநல ஆலோசகர், நாகை மகளிர் காவல் நிலையம்
போக்சோவில் கைது செய்யப்பட்ட மனநல ஆலோசகர், நாகை மகளிர் காவல் நிலையம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 4:58 PM IST

நாகப்பட்டினம்: நாகை அருகே உள்ள பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ல ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை அருகே உள்ள பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான அரசு காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த காப்பகத்தில் இருந்து குழந்தைகள் அடிக்கடி மாயமாகி செல்வதும் அவர்களை மீட்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால், காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனநிலை ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மனநல ஆலோசனை வழங்க, மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் நியமிக்கப்பட்டு ஆலோசனை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மாணவிகளிடம் மனநல வகுப்பில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் கேட்ட கேள்விகள் மாணவிகளுக்கு சங்கடமான, அசெளகரிகமான இருப்பதாக மாணவிகள் குழந்தைகள் நலக்குழு காப்பக கண்காணிப்பாளர் வினோதினியிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இது குறித்து ஆதரவற்ற குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:"துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும்".. நான்கு மாத தேடுதல் வேட்டை.. ஆல்வின் பிடிபட்டது எப்படி?

போக்சோவில் கைது: புகாரின் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் குற்றம் சாட்டப்பட்ட சத்யபிரகாஷ் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அறிக்கை:இச்சம்பவம் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தேவையான ஆற்றுப்படுத்துதல் மற்றும் மனரீதியான ஆதரவு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துதல் மனநல மருத்துவர் ஆகியோர் குழு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை: அதனைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி, "சம்பந்தப்பட்ட அரசு குழந்தைகள் காப்பகத்தில் 5 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. தவறான பார்வை, தவறான செய்கைகள் மூலம் பாலியல் தொந்தரவு செய்ததாக குழந்தைகள் கொடுத்த புகாரில் ஆற்றுப்படுத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு குழந்தைகள் காப்பகத்தில் இதுவரையில் 2 ஆண் ஆற்றுப்படுத்துனரும், 1 பெண் ஆற்றுப்படுத்துனரும் பணியாற்றி வந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள மற்றொரு ஆண் ஆற்றுப்படுத்துனரும் மாற்றம் செய்யப்பட்டு மூவரும் பெண்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details