சென்னை:மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர், ஆன்லைன் ரம்மி விளையாடி தொடர்ந்து பணத்தை இழந்து உள்ளார். இந்த நிலையில், இன்று (மே 16) அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதரபி மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். அவ்வாறு விளையாடியதில் அதிக அளவிலான பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக அவர் தொடர்ந்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக தான் இழந்த பணத்தை மீட்டெடுக்க, தனது தந்தையிடம் 24 ஆயிரம் ருபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை 4 ஆயிரம் மட்டுமே வங்கிக் கணக்கு மூலம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்துடன் அறையின் உள்ளே சென்று கதவை தாழிட்டுக்கொண்ட தனுஷ், இறுதியாக அப்பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி, அந்த பணத்தையும் இழந்ததாக கூறப்படுகிறது. இதில் தனுஷ் மிகுந்த மன வேதனையடைந்துள்ளார்.