தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வேறு சின்னத்தில் போட்டி".. துரை வைகோ! - Durai Vaiko

MDMK Symbol Change: மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

MDMK Symbol Change
MDMK Symbol Change

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 5:04 PM IST

MDMK Symbol Change

திருச்சி:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மதிமுகவுக்கு 'பம்பரம்' சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது.

திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில்‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், மதிமுகவினர் கேட்ட பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்ட நிலையில், நீதிமன்றமும் அதையே பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில், திருச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தான் கூறியுள்ளது. நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கனவே மதிமுக போட்டியிட்ட சின்னத்தை, பொது சின்னமாக வைக்காமல், ‘லாக்’ செய்து வைத்துள்ளனர். தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு, அதை ரிலீஸ் செய்து விட்டால், மதிமுகவுக்கு பயன்படுத்திக் கொள்வதாக கேட்டோம். சட்டப்படி சின்னத்தைக் கொடுக்க முடியும் என்றாலும், அதனால் சில பிரச்னைகள் வரும். அதுவே தவறான முன்னுதாரணமாகி விடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் விதிமுறைகள்படி சட்டத்தில் இடம் இருப்பதாகக் கூறி, மீண்டும் அந்த சின்னத்தைக் கேட்டோம். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவைத்தான் நீதிமன்றமும் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு, மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தாலும், தேர்தல் பிரச்சாரம் துவங்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில், இனியும் தாமதப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.

இதற்கு மாறாக வேறு இரண்டு சின்னங்கள் தேர்வு செய்து, அதில் ஏதேனும் ஒன்றை பெற்று, அதில் போட்டியிடுவோம். அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த காலங்களை போல், இப்போது இல்லை. வேட்பாளரையும், சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு வாக்கு அளிக்கும் அளவுக்கு மக்கள் தெளிவாக உள்ளனர்.

அனைவரின் கைகளிலும் மொபைல் போன் இருப்பதால், 24 மணி நேரத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். பாஜகவை எதிர்க்கும் உண்மையான அணியாக திமுக கூட்டணியை மக்கள் பார்க்கின்றனர். எனவே, அந்த கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளரையும், அவரது சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு வாக்கு அளிப்பார்கள்.

இதனால், சின்னத்தைப் பொறுத்தவரை எந்த பின்னடைவும் ஏற்படப் போவதில்லை. நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். கடந்த தேர்தல்களில், சில தலைவர்கள் புதிய சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். பாஜக வந்து விடக்கூடாது என்பதில் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: "தேர்தலில் வாக்கு கேட்க எங்கள் சின்னத்தை தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும்" - சீமான் பேச்சு - NTK Mic Symbol Intro

ABOUT THE AUTHOR

...view details