தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பொதுக்குழு கூட்டம் முடித்து மதுரை திரும்பிய மதிமுக நிர்வாகிகளுக்கு நேர்ந்த துயரம் - MDMK Persons died in Melur Accident - MDMK PERSONS DIED IN MELUR ACCIDENT

Melur Accident: மதுரை மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் மதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 2:59 PM IST

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள மஹாலில் நேற்று (ஆக. 4) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30ஆவது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் மதிமுக தொண்டரணியைச் சேர்ந்த மதுரை நிர்வாகிகள் பச்சமுத்து, புலி சேகர், அமிர்தராஜ் உள்ளிட்டோர் கார் மூலம் மீண்டும் மதுரை திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த இவர்களது கார் மதுரை மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மதிமுக நிர்வாகிகள் பச்சமுத்து, புலி சேகர், அமிர்தராஜ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மேலூர் போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மதிமுக நிர்வாகிகள் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சாலை விபத்தில் இறந்த மதிமுக நிர்வாகிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ மதுரை வருகிறார் என மதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:"ஏன் நடுரோட்டில் நிக்குது" திமுக நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த கவுன்சிலரின் கணவர்.. நத்தம் அருகே நடந்தது என்ன? - DMK executive car window broken

ABOUT THE AUTHOR

...view details