சென்னை: இந்திய ஜனநாயக புலிகள் கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான், சுயேட்சை சின்னத்தில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 18வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இந்த நிலையில், நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து கடித்து அளித்துள்ளார்.
மேலும், தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது எனவும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மன்சூர் அலிகான் கடிதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மன்சூர் அலிகான், "காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன்.