ETV Bharat / state

பக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இடிந்தகரை மீனவர்கள்; வரவேற்று மகிழ்வித்த அப்பாவு! - FISHERMEN RETURNS FROM BAHRAIN

பக்ரைன் நாட்டில் சிக்கிய 28 மீனவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பிய நிலையில், அவர்கள் அனைவரையும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, மக்களவை உறுப்பினர் ராபர்ட் புரூஸ் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பக்ரைன் நாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 28 மீனவர்கள் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த காட்சி
பக்ரைன் நாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 28 மீனவர்கள் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த காட்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

திருநெல்வேலி: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பக்ரைன் சிறையில் அடைக்கப்பட்ட 28 மீனவர்கள் தமிழகம் திரும்பினர் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்டார் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர்களை இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

நெல்லை மாவட்டம் இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள், பக்ரைன் நாட்டுக் கடல்பகுதி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி அந்நாட்டு கடற்படையால் செப்டம்பர் 11 அன்று கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, பிடிபட்ட அனைவருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கி பக்ரைன் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக இந்த தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, பஹ்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம் வாயிலாக பிடிபட்டவர்களின் தண்டனையை குறைத்து, தாயகம் அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பலனாக, தண்டனை மூன்று மாதமாகக் குறைக்கப்பட்டு டிசம்பர் 10 அன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து விடுதலையான அனைவரையும் இந்தியா அழைத்து வர வெளியுறவுத் துறை ஏற்பாடுகள் செய்தது. அதன்படி, அனைவரையும் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக அலுவலர்கள் பத்திரமாக இந்தியா அனுப்பி வைத்தனர். அனைவரும் புதன்கிழமை இரவு (டிசம்பர் 18) திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தனர்.

இதையும் படிங்க
  1. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி: ஜமைக்கா நாட்டில் நெல்லை இளைஞர் சுட்டுக்கொலை!
  2. ஆம்பளைங்க யாரும் இல்லையா? சர்ச்சை பேச்சுக்கு பாமக எம்எல்ஏ அருள் விளக்கம்!
  3. ராணிப்பேட்டை கார்த்திகா.. போலி பணி ஆணை முதல் உதவி தொகை வரை.. பல கோடியை சுருட்டியதாக புகார்!

இவர்களை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் செ. ராபர்ட் புரூஸ் ஆகியோர் வரவேற்று, வேன் மூலமாக இடிந்தகரைக்கு அனுப்பிவைத்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, "சிறை பிடிக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் அவர்களை விடுதலை செய்ய முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதன் பலனால் மீனவர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் முழுமையாக வீடு திரும்பிய பிறகுதான் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்று வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு 'அயலகம்' என்ற சிறப்புத் துறையை உருவாக்கியுள்ளது," என்று தெரிவித்தார்.

இது குறித்து நாடு திரும்பிய மீனவர் அபிஷேக் அளித்த பேட்டியில், தொழில் செய்வதற்காக அங்கு சென்றோம். எல்லை தெரியாமல் மீன் பிடித்து விட்டோம். தமிழக அரசு எடுத்த முயற்சியால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளோம். சிறையில் எங்களுக்கு சாப்பாடு சாதாரணமாகத் தான் இருந்தது என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.