விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நொளம்பூர் கிராமத்தை சேர்ந்த வினோதினி. இவருக்கும் உத்திரமேரூர் குன்ன கொளத்தூரை சேர்ந்த பாலாஜி (32) என்பவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் பாலாஜி வினோதினியின் ஊரான நொளம்பூர் வந்துள்ளார்.
அப்போது திண்டிவனம் அடுத்த வட கொளப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நொளம்பூர் அணிக்கும், கீழ்சேவூர் அணிக்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் நொளம்பூர் அணி சார்பில் பந்து வீச சென்ற பாலாஜி திடீரென மயங்கி கிழே விழுந்துள்ளார்.
அப்போது உடன் விளையாடியவர்கள் அவரை மீட்டு பிரம்மதேசம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:திடீரென விழுந்து உடைந்த விநாயகர் சிலை.. சென்னையில் போலீசாருடன் வாக்குவாதம்!
இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.