தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! - Vijayakanth Birthday - VIJAYAKANTH BIRTHDAY

Accident in Vijayakanth Birthday Celebration: கடலூர் அருகே, மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த வெங்கடேசன்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த வெங்கடேசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 3:02 PM IST

கடலூர்:மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள், பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்து நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நெய்வேலியில் கான்ட்ராக்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வெங்கடேசன் இன்று (ஆக.25) கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த பகுதியில் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கொடிகம்பம் நடும் இடத்திற்கு மேலே சென்ற உயர்அழுந்த மின்சாரக் கம்பியில், கொடிக்கம்பம் உரசியதால் வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். அப்போது, அவரை காப்பாற்ற முயற்சி செய்த மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தற்போது காயமடைந்த 5 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக நடந்த இந்த அசம்பாவித சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் 72வது பிறந்தநாள்: கோயம்பேட்டில் சிலை திறப்பு.. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details