தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே அமைச்சரிடம் தேசிய விருது பெறும் மதுரை ரயில்வே கோட்ட அலுவலர்கள்! - ATI VISHISHT RAIL SEVA PURASKAR

துறை சார்ந்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் மதுரை ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த இரண்டு அலுவலர்கள், ரயில்வே வாரியத்தின் மிக உயரிய விருதான 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' என்ற தேசிய விருதைப் பெறவுள்ளனர்.

அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது
விருதைப் பெறவுள்ள மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் ஜாபர் அலி மற்றும் மஞ்சுநாத் யாதவ் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

மதுரை: துறை சார்ந்து முன்மாதிரியான செயல்திறன் மற்றும் சிறந்த சேவையின் காரணமாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மதுரை ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த இரண்டு அலுவலர்கள் ரயில்வே வாரியத்தின் மிக உயரிய தேசிய விருதாக கருதப்படும் 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' என்ற தேசிய விருதைப் பெற உள்ளனர்.

டெல்லியில் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி 69-வது ரயில்வே வார விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தேசத்தின் மதிப்பு மிக்க ரயில்வே வாரிய விருதும் வழங்கப்பட உள்ளது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையில் பணி புரியும் பல்வேறு நிலை பணியாளர்களுக்கு, அவர்களின் பணியில் முன்மாதிரியான செயல்திறன் மற்றும் சிறந்த சேவையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள 15 ரயில்வே கோட்டங்களிலிருந்து 89 பணியாளர்கள் 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' என்ற விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதன் முதலாக பயணிகள் ரயில் 1853 ஏப்ரல் 16-ஆம் தேதி இயக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த ரயில்வே வார விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:"உலகளவில் செஸ் என்றால் அது தமிழ்நாடு தான்" விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்!

அதன் அடிப்படியில், தெற்கு ரயில்வேயில் இருந்து மொத்தம் 8 பேர் இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளனர். அதன்படி, மதுரை ரயில்வே கோட்டத்தில் முதுநிலை கோட்ட மின் பொறியாளராகப் பணியாற்றும் மஞ்சுநாத் யாதவ், நிலைய கண்காணிப்பாளராகப் பணியாற்றும் ஜாபர் அலி ஆகியோர் இந்த 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இவ்விருதை வழங்குகிறார்.

இதுமட்டும் அல்லாது, நிலைய கண்காணிப்பாளராகப் பணியாற்றும் ஜாபர் அலி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தபோது, டிசம்பர் 2023 வெள்ளத்தில் இருந்து, செந்தூர் ​​எக்ஸ்பிரஸில் சுமார் 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக, தேசத்தின் மதிப்புமிக்க ரயில்வே வாரிய விருதான 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details