மதுரை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கிருஷ்ணசாமி தரப்பில், "மாஞ்சோலை பகுதி மக்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "மாஞ்சோலை தொழிலாளர்கள் பிபிடிசி நிறுவனத்தால் அங்கு பணியமர்த்தப்பட்டவர்கள். அவர்களை பாரம்பரிய வனவாசிகளாக எவ்வாறு கருத முடியும்? தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைக்கான திட்டம் ஏதும் உள்ளதா?” என கேள்வி எழுப்பினர்.