மதுரை:மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த ஜெயப்பாண்டி என்பவர், கடந்த 2014, ஜூலை 11 அன்று கொலை செய்யப்பட்ட வழக்கில், எனது கணவர் இசக்கியை கடந்த 2014 ஜூலை 13ஆம் தேதி இரவு, அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின், அன்றைய தினம் முதல் அதே ஆண்டு ஜூலை 15 வரை காவல் துறையினர் சட்டவிரோதக் காவலில் வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர்.
அதன் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தி, திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 21 அன்று சிறையில் இருந்த எனது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்தது. காவலர்கள் தாக்கியதால்தான் எனது கணவர் உயிரிழந்து விட்டார். எனவே, எனது கணவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, “கடந்த 2016-2017 மற்றும் 2011-2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை விசாரணைக்கு அழைத்துச் சென்று கைது செய்யப்பட்டவர்கள், விசாரணையின்போதோ அதற்கு பிறகு சில நாட்களில் உயிரிழந்து உள்ளனர். விசாரணையின்போது காவலர்கள் கடுமையாக தாக்குவதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.