தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணமதிப்பிழப்பு நடவடிக்கை; ரூ.1.17 கோடியை திருப்பிச் செலுத்த முடியுமா? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு! - Unpaid money on demonetisation

Central government on demonetization process: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது திருப்பிச் செலுத்த இயலாத ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் பணத்தை மீண்டும் ஏற்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த நபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Picture Credits - ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 10:31 PM IST

மதுரை: ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் தன்னிடம் இருக்கும் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை மீண்டும் ஏற்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த அஜய் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, “நான் பருத்தி பஞ்சு மற்றும் நூற்பாலைகளில் இருந்து பெற்று வேறு தொழிலகங்களுக்கு அதனை விற்பனை செய்து வருகிறேன். ஆண்டுதோறும் முறையாக வருமான வரியைச் செலுத்துகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு செய்தது.

2016 டிசம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்பட்டது. டிசம்பர் 30ஆம் தேதி திருப்பூர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை மாற்றச் சென்றேன். அங்கு ஏற்கனவே நிறைய நபர்கள் வரிசையில் இருந்ததால், நானும் வரிசையில் காத்திருந்தேன்.

சுமார் 04.30 மணி அளவில் வங்கியின் மேலாளர் சர்வர் பழுதாகிவிட்டதாகவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் குறிப்பிட்டு வரிசையில் காத்திருந்தவர்களுக்கு கால அவகாசம் பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

தொடர்ச்சியாக பலமுறை ரிசர்வ் வங்கிக்கு இது தொடர்பாக மனு அனுப்பிய நிலையில், எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இதனால் நூல் வாங்கிய நிறுவனத்திற்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாத நிலை உருவானது. இதனால் அவர்கள் என் மீது கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார்கள். என் மீது இரண்டு குற்ற வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், மத்திய அரசின் உத்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பான நிவாரணம் கோரி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே, என்னிடமுள்ள ஒரு கோடியே 17 லட்சத்தை வங்கி ஏற்க மறுத்தால், என்னால் பிற நிறுவனங்களுக்கு தொகையை திருப்பிச் செலுத்த இயலாது.

ஆகவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் என்னிடம் இருக்கும் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் பணத்தை மீண்டும் ஏற்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 500, 1,000 ரூபாயை மாற்ற முயற்சித்த அனைத்தும் ஆதாரங்கள் கொண்ட மனுக்களையும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:புதுச்சேரி சிறுமி வழக்கு; 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்! - Puducherry Girl Murder Case

ABOUT THE AUTHOR

...view details