மதுரை: மதுரையைச் சேர்ந்த கயல்விழி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஆதிதிராவிடர் , பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் நோக்கத்திலும் ஒன்றிய அரசு 'ஸ்ரெஸ்தா' திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தியது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் தகுதித் தேர்வை நடத்தி, மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த திட்டத்தின்கீழ், என் மகன் தனது 9ஆம் வகுப்புக்கான தேர்வை 2022ஆம் ஆண்டில் எழுதி, தேசிய அளவில் 324வது இடத்தைப் பிடித்து, மத்திய அரசின் உதவித்தொகையைப் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், அவர் கடந்த மாதம் 11ஆம் தேதி தனது 10ஆம் வகுப்புத் தேர்வை எழுதி முடித்தார். இதனால் பிளஸ்-1 வகுப்புக்கான 'ஸ்ரெஸ்தா' உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தயாராக இருந்தோம். விசாரித்தபோது, வேறொரு இணையதள முகவரியில் கடந்த மார்ச் 12ஆம் தேதியே அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பிக்கும் தேதி முடிந்துவிட்டது என்பது தெரிந்தது. வருகிற 24ஆம் தேதி தேர்வு நடக்கும் என அறிவித்துள்ளனர்.