தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு.. ஜாபர் சேட் வழக்கில் திடீர் ட்விஸ்ட்! - Jaffer Sait case - JAFFER SAIT CASE

Jaffer Sait Case: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 7:05 PM IST

சென்னை: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

பின்னர், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி, அவருக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

பின்னர், மனு தொடர்பாக சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை நீதிமன்றம் திரும்பப் பெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 28) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து போலியான கணக்குகள் மூலம் பணம் மாறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கில் குற்றத்திற்கான முகாத்திரம் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது. குற்றங்களில் இருந்து தப்பிக்க சட்ட ஆவணங்கள் தெரிந்தே திருத்தப்பட்டுள்ளது என தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, வகுக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, ஜாபர் சேட் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:DMK Files 3: ஆ.ராசா - ஜாபர் சேட் உரையாடல்.. அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ!

ABOUT THE AUTHOR

...view details