தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பிரிந்திருந்தாலும் குழந்தையைப் பார்க்க கணவருக்கு உரிமை உண்டு” - ஐகோர்ட்!

பிரிந்து வாழ்ந்தாலும் குழந்தையைப் பார்க்க கணவருக்கு இந்து திருமணச் சட்டப்படி உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 6:22 AM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த அம்பிகா மற்றும் சுஜிக்கு, கடந்த 2011ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் படி திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர், இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அம்பிகாவிடம், அவரது கணவர் வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டுள்ளார்.

இதனால், ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நேரத்தில் குழந்தை தாய் அம்பிகாவிடம் உள்ளது. இந்நிலையில், குழந்தையை தனியாக பராமரித்து வருவதால், தனது மருத்துவச் செலவு, குழந்தை படிப்பு மற்றும் மாதம் பராமரிப்பு செலவாக ஜூவனாம்சம் வழங்க வேண்டும் என அம்பிகா வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவச் செலவு, குழந்தை படிப்புக்கான செலவு மற்றும் மாதம் 40 ஆயிரம் ரூபாய் வழங்க சுஜிக்கு உத்தரவிட்டது. மேலும், மாதம் ஒருமுறை குழந்தையைப் பார்க்க சுஜிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எனவே, நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அம்பிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமிநாராயணன், “இந்து திருமணச் சட்டப்படி குழந்தையைப் பார்க்க கணவருக்கு முழு உரிமை உள்ளது. அந்த உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது. குழந்தை தந்தையை அறிந்து வளர்வதே நல்லது” என உத்தரவிட்டு, அம்பிகா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details