சென்னை : பாஜக ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கடந்த 7ம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள் இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
இந்நிலையில் ஹெச்.ராஜா வன்முறையைத் தூண்டும் விதமாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தது குறித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க : "வோட் ஜிகாத்" -ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்!
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை விமான நிலைய போலீசார் ஹெச்.ராஜா மீது 192 கலவரத்தை தூண்டுதல், 196 (1)(a) வன்முறையை தூண்ட முயற்சித்தல், 353 (1)(b) பொய்யான தகவல் பரப்புதல், 353 (2) இரு தரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்